தற்போதைய சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் சில பாடசாலைகளுக்கு விடுமுறை வழஙாகப்பட்டுள்ளது.
இதன்படி, களனி மகா வித்தியாலயம், நீர்கொழும்பு றோமன் கத்தோலிக்க வித்தியாலயம், பியகம ஆரம்ப பாடசாலை மற்றும் யபரலுவ ஆனந்த கனிஷ்ட வித்தியாலயம் ஆகியவற்றுக்கும் கம்பஹா மாவட்டத்தின் வத்தளை கல்வி வலயத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும்
விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
செய்தியாளர் – சமர்க்கனி