இலங்கை

நானுஓயாவிலும் வெடித்தது காஸ் அடுப்பு!

நானுஓயா, கிலாரண்டன் பகுதியிலுள்ள வீடொன்றில் இன்று காலை எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது.

குறித்த வெடிப்புச் சம்பவத்தால் பாதிப்பு ஏற்படவில்லை எனவும், வீட்டின் சமையலறைக்கு மாத்திரம் சிறிதளவு சேதம் ஏற்பட்டுள்ளது எனவும் வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.

நானுஓயாவில் இப்பகுதியில் இதற்கு முன்னரும் எரிவாயு அடுப்பு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button