அருவியை
அலங்கரிக்கும்
கல்லைப் போல
ஆசுவாசப்படுகிறது
நதியின்
நீலம் தொடாத
மேகச் சாரலில் தான்
எத்தனை கனவுகள்…
அன்பின் நூலிழைகளால்
அகம் தொட்டுப் போகிறது
செண்பகப் புள்ளின்
சிவந்த விழிகள்…
தாழம்பூக்களின்
தவத்தினைப் போல
உயிர் நரம்புகளில்
முகாரியின் மெல்லிய ஓசை…
காலம் பறித்துப் போன
கனவுப் பூக்கள்
மெல்ல மேலெழுகிறது
அதன் முத்திக்காக..
கோபிகை.