
பலத்த காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வரும் தந்தை எழுந்து நடக்க முடியாத நிலையில் தனது நான்கு வயதுடைய மகனுக்கு வைத்தியசாலையில் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தியுள்ள புகைப்படம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மன்னார் – நானாட்டான் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் தந்தை தாய் மகள் மகன் என நால்வரும் பலத்த காயங்களுக்கு உள்ளான் நிலையில் நான்கு வயது மகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உயிரிழந்த சிறுவனின் சடலம் இறுதிக் கிரியைகளுக்காக உறவினர்களிடம் கையளிக்கும் முன்னர் வைத்திய சாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் தந்தைக்கு காண்பிக்கப்பட்ட நிலையில்,தனது மகனின் உடலை தடவி தந்தை அஞ்சலி செலுத்தினார்.குறித்த புகைப்படம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.