இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

உணவுப் பணவீக்க நாடுகளில் முன்னிலையில் இலங்கை!!

இலங்கை, உணவுப் பொருட்களின் விலையேற்றம் அதிகமாக இருக்கும் முதல் 5 நாடுகளில் இடம்பிடித்துள்ளது.

உலக வங்கியின் அண்மைய மதிப்பீட்டின் படி, உணவுப் பணவீக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இலங்கை 5 ஆவது இடத்தில் உள்ளது.

இந்தப் பட்டியலில் லெபனான் முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து சிம்பாப்வே, வெனிசூலா மற்றும் துருக்கி ஆகியவை உள்ளன.

பட்டியலில் ஐந்தாவது இடத்திலுள்ள இலங்கைக்கு அடுத்தபடியாக ஈரான், ஆர்ஜென்டினா, சூரினாம், எத்தியோப்பியா மற்றும் மால்டோவா ஆகிய நாடுகள் உள்ளன.

Related Articles

Leave a Reply

Back to top button