இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இன்றைய (28.08.2024 – புதன்கிழமை) பத்திரிகையில் முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகள் சுருக்கமாக ஒரே பார்வையில்!!

News

1.

எங்கள் ஆட்சியில் இராணுவத்தினரைப் பாதுகாப்போம் – நாமல்!!

தமிழரைப் பாதுகாத்த இராணுவத்தினர் மீது யுத்தக் குற்றங்கள் முன்வைக்கப்பட்டுள்ள. எமது ஆட்சியில் இராணுவத்தினரைப் பாதுகாப்போம் என பொதுஜன பெரமுன வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

2.

புகை மற்றும் மதுவால் நாளாந்தம் 100 மரணங்கள்!!

இலங்கையில், புகைப்பிடித்தல் மற்றும் மதுபான பாவனையால் அன்றாடம் 100 மரணங்கள் பதிவாகுவதாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவனை மையம் தெரிவித்துள்ளது.

3.

நாளை வெளியாகும் ரணிலின் தேர்தல் அறிக்கை!!

நாளை, வியாழக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் அறிக்கை கொழும்பில் உள்ள தாஜ் சமுத்ரா ஹோட்டலில் வெளியிடப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

4.

சுவிஸ் குடும்பஸ்தர் கொலை தொடர்பில் வெளியான தகவல்!!

வவுனியாவில் சுவிஸிலிருந்து வருகை தந்த குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இச்சம்பவம் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் கனகராயன்குளம், சின்னடம்பன் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

5.
எதிர்ப்புடன் நடைபெற்ற கனேடிய தமிழர்பெருவிழா!!
கனேடியத் தமிழர் பேரவை வருடந்தோறும் தமிழர் தெருவிழா எனும் நிகழ்வினை நடத்திவருகின்ற நிலையில், இதன் பத்தாவது வருடமாக இந்த மாதம் 24ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில் குறித்த விழாவை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இம்முறை இடம்பெற்ற கனேடிய தமிழர் பேரவையின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் மக்கள் விழாவைப் புறக்கணிக்க வேண்டும் என கனடாவில் உள்ள சில தமிழ் அமைப்புகளும் சில செயற்பாட்டாளர்களும் கனடா வாழ் தமிழ் மக்களைக் கோரியிருந்தனர்.

இந்நிலையில் இந்த நிகழ்வில் எதிர்ப்பு கிளம்பியது.

தென்னிந்தியாவிலிருந்து பாடகராக இணைந்து கொண்ட பிரபல பின்னணி திரை இசை பாடகர் சிறிநிவாஸ் மீது பாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாளர்கள் முட்டைகளை வீசி எதிர்ப்பை வலுப்படுத்தினர்.

செய்தியாளர் – சமர்க்கனி

Related Articles

Leave a Reply

Back to top button