இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இன்றைய (23.08.2024 – வெள்ளிக் கிழமை) பத்திரிகையில் முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகள் சுருக்கமாக ஒரே பார்வையில்!!

News

 1.

தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!!

2023 இல் நடைபெறவிருந்த உள்ளூராட்சி தேர்தலைப் பிற்போட்டமையானது மக்களின் அடிப்படை உரிமை மீறல் எனவும் தேர்தல் ஆணையாளர் உள்ளிட்ட குழுவினரும் நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியும் குறித்த உரிமை மீறலைச் செய்துள்ளனர் எனவும் இலங்கை உயர் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது. 

2.

சட்டத்தைப் புறக்கணிக்கும் அரசாங்கம் ஆபத்து!!

சட்டத்தைச் சரிவர கையாள முடியாத அரசாங்கத்தினால் அந்த தேசத்திற்கு எந்த நன்மையும் இல்லை எனவும் அந்த அரசினால் தேசத்தைக் கட்டி எழுப்ப முடியாது எனவும் எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தி ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவிதாதுள்ளார். 

3.

புதிதாக காணிகளைச் சுவீகரிப்பதை இலங்கை படையினர் நிறுத்த வேண்டும்!

இலங்கை இராணுவம் தம்வசமுள்ள காணிகளை விடுவிப்பதுடன் புதிதாக காணிகளைச் கையகப்படுத்துவதையும் நிறுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

4.

குற்றம் சாட்டப்பட்டவர்களை உயர் பதவிகளில் இருந்து நீக்க வேண்டும்!!

மனித உரிமை மீறல்கள் தொடர்பில்  நம்பகத்தன்மையுடன் குற்றம் சாட்டப்படுபவர்களை உயர் பதவிகளில் இருந்து நீக்க வேண்டும் என ஐ. நா. மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் கோரிக்கை விடுத்துள்ளது. 

5.

புதிய ஜனாதிபதி தொடர்பில் ஐ. நா.  வெளியிட்ட அறிக்கை!!

இவங்கையில்  புதிய ஜனாதிபதியாக மக்களால் தெரிவு செய்யப்படுபவர் அரசியல் அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பதற்கும் பொறுப்பு கூறல் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும் தேவையான அடிப்படை அரசியல் யாப்பு மற்றும் நிறுவன ரீதியான சீர்திருத்தங்களை முன்னெடுக்க வேண்டும் என ஐ. நா.  மனித உரிமை ஆணையாளர் அலுவலகம்  அறிக்கை ஒன்றின் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

6.

மக்களுக்கான மானியம் வழங்குதல் தவறு!! 

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களுக்கு அரசாங்கம் மானியங்களை வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என பெஃப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

7.

ஜனாதிபதி வேட்பாளர் திடீர் மரணம்!!

இலங்கையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட ஐதுருஸ் இலியாஸ் (79) இன்றிரவு (22-08-2024) காலமானார்.

இந்தத் தகவலை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

8.

பிரித்தானியாவில் இடம்பெற்ற துயரச் சம்பவம்!!

பிரித்தானியாவில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் தாய் மற்றும் அவரது 3 குழந்தைகளும் உயிரிழந்த சம்பவம் ஒன்று சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் பிராட்போரட்டில் நகரில் அமைந்துள்ள வீடொன்றில் அதிகாலை 1.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button