இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இன்றைய (23.07.2024 – செவ்வாய்க் கிழமை) பத்திரிகையில் முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகள்!!

News

1.

மருந்தகத்தில் இடம்பெற்ற மரணச்சடங்கு!!

யாழ்ப்பாண பகுதியில் உள்ள மருந்தகம் ஒன்றில் உயிரிழந்த உறவினர் ஒருவரின் மரணச்சடங்கு இடம்பெற்ற நிலையில் சுகாதார அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

2.

22வது திருத்தத்தால் ஜனாதிபதி தேர்தலில் பாதிப்பு!!

அரசமைப்பின் 22வது திருத்தம் ஜனாதிபதி தேர்தலை கடுமையாகப் பாதிக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ. எல்.. பீரீஸ் தெரிவித்துள்ளார்.

3.

சில இடங்களில் எரிவாயு தட்டுப்பாடு!!

நாட்டில், நுவரெலியா, ஹற்றன் போன்ற இடங்களில் எரிவாயுவுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாகவும் இதனால் மக்கள் பெரும் அழகியை எதிர்நோக்கியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

4.

அரசாங்கம் நாட்டில் குழப்பம் ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு!!

நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தவே அரசாங்கம் 22வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியது என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

5.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு நிதி வழங்கல்!!

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு ரூபா. 200 000 உதவித்தொகை வழங்கப்படுவதற்கான பதிவு கிளிநொச்சியில் இடம்பெற்றது.

6.

இலங்கையில் மீண்டும் பணவீக்கம்!!

இலங்கை – சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் 2024 ஜூன் மாதத்திற்கான இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் மாதாந்திர நுகர்வோர் பணவீக்கத்தை வெளியிட்டுள்ளது.

அதன்படி, 2024 மே மாதம் 1.6% ஆக பதிவாகிய இலங்கையின் பணவீக்கம் 2024 ஜூன் மாதம் 2.4% ஆக அதிகரித்துள்ளது.

செய்தியாளர் – சமர்க்கனி

Related Articles

Leave a Reply

Back to top button