இன்றைய (19.10.2024 – சனிக்கிழமை ) பத்திரிகையில் முன்பக்கத்தில் இடம்பிடிக்கக் கூடிய செய்திகள் சுருக்கமாக ஒரே பார்வையில்!!
News
1.
உயிர்த்தஞாயிறு பேரழிவில் அரசியல் செய்ய வேண்டாம் – கத்தோலிக்க திருச்சபை!!
உதய கம்மன்பில அவர்கள் உயிர்த்தஞாயிறு தாக்குதல் பேரழிவை வைத்து அரசியல் செய்யக்கூடாது என கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2.
வரி அதிகரிப்பு!!
பருப்பு வகைகள் மற்றும் மாசிக்கருவாட்டுக்கு வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.
3.
வரி செலுத்துவோர் தொகை அதிகரிப்பு!!
சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 160 வீதத்தால் அதிகரித்துள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
4.
இந்திய சிறப்பு முகாமில் உள்ள இலங்கை ஏதிலிகள் போராட்டம்!!
இந்தியாவின் திருச்சி மத்திய சி றைச்சாலையில் உள்ள இலங்கை ஏதிலிகள், தம்மை விடுவிக்குமாறு கோரி, நேற்று முன்தினம் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
5.
சங்குப்பிட்டிப் பாதை தடை!!
அவசர திருத்த வேலைகள் காரண மாக கேரதீவு – சங்குப்பிட்டிப் பாலத்தினூடாக கனரக வாகனங்கள் பயணிப்பது நேற்று முதல், மூன்று நாட்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளது.
6.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளிடம் விசாரணை!!
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளான 30 பேரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
செய்தியாளர் – சமர்க்கனி