இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இன்றைய (17.07.2024) செய்திகள்!!

News

1.

 ஒலிம்பிக் தீபத்தை ஏந்திய ஈழத்தமிழருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு!!

ஒலிம்பிக் தீபத்தை ஏந்திய ஈழத்தமிழரான தர்சன் செல்வராஜாவுக்கு  பிரான்ஸ் வாழ் இலங்கை மக்கள் வீதியில் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். 

2. 

இலங்கையில் ஏற்பட்ட நிலநடுக்கம்!!

சமீப காலமாக இலங்கையின் கடற்பிராந்தியங்களிலும் நிலப்பகுதிகளிலும் சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் அதிகளவில் ஏற்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் நேற்றையதினம் (16-07-2024) மாலை அனுராதபுரத்திற்கும் கந்தளேவிற்கும் இடையில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

3.

அதிபர் ஆசிரியர்கள் இரண்டு வாரங்களுக்கு சட்டப்படி தொழிற்சங்க நடவடிக்கை!!

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் (22) இரண்டு வாரங்களுக்கு சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது எனவும் 

இதன்படி, பாடசாலைகளுக்கு வெளியில் அனைத்து நடவடிக்கைகளில் இருந்தும் விலகுவதற்கு கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாகவும் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

4.

ஓமானில் வாழும் இலங்கையர்களுக்கான அறிவிப்பு!!

ஓமானில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தையடுத்து அங்கு பணிபுரியும் இலங்கையர்களை பாதுகாப்பாக இருக்குமாறு அந்த நாட்டில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

5.

இலங்கைக்கு கட்டார் நாடு வழங்கிய உயிர் காக்கும் உதவி!! 

இலங்கையில் இதய மற்றும் சுவாச நோய்கள் தொடர்பான நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதற்காக அத்தியாவசிய மருந்துகளை கட்டார் வழங்கியுள்ளது.

செய்தியாளர் சமர்க்கனி

Related Articles

Leave a Reply

Back to top button