இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இன்றைய ( 10.08.2024 – சனிக்கிழமை) பத்திரிகையில் முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகள் சுருக்கமாக ஒரே பார்வையில்!!

News

1. 

தேர்தல் களத்தில் இருந்து நாமல் பின்வாங்குவாரா!!

ஜனாதிபதி தேர்தல் களத்தில்,  கடைசி நேரத்தில் நாமல் பின்வாங்க கூடும் என பாராளுமன்ற  உறுப்பினர் திசாநாயக்க தெரிவித்துள்ளார் 

பிரதமருக்கு எதிராக முறைப்பாடு!!

பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கு ஆசீர்வாதம் கிடைக்கும் பொருட்டு கதிர்காமத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பூஜை தொடர்பில் பவ்ரல் அமைப்பு தேர்தல் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு அளித்துள்ளது. 

3.

22 மாணவர்களால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட மாணவி!! 

தனமல்வில பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவர், அதே பாடசாலையில் கல்வி கற்கும் 22 மாணவர்களினால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.

4.

கனடாவில் காணாமல் போன தமிழர்!!

கனடாவில் ரொறன்ரோ பகுதியில் அமைந்துள்ள பிரம்டனில் 64 வயதான யோகராஜ் என்ற தமிழர் காணாமல் போய் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த நபரை சுமார் ஒரு வார காலமாக காணவில்லை என குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

5.

பெண் பிள்ளைகளின் திருமண வயது 9!!

ஈராக் நாட்டில் பெண்களின் திருமண வயதை 9 ஆக குறைக்கும் சர்ச்சைக்குரிய சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனவே இந்த மசோதவனுக்கு எதிராக ஈராக் பெண்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

செய்தியாளர் – சமர்க்கனி

Related Articles

Leave a Reply

Back to top button