இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இன்றைய (08.10.2024 – செவ்வாய்க் கிழமை) பத்திரிகையில் முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகள் சுருக்கமாக ஒரே பார்வையில்!!

News

 1.

பிரான்சில் நெல்லியடி  இளைஞர்  மர்மமான முறையில் உயிரிழப்பு !    

பிரான்சில்  வாழ்ந்து வந்த இளைஞர் ஒருவர் நேற்றைய(06.10.2024) தினம் மர்மமான முறையில்உயிரிழந்துள்ளார் .

ஐந்து வருடங்களுக்கு முன்னர்  பிரான்ஸ் நாட்டுக்கு சென்ற குறித்த இளைஞர் தொழில் செய்து வந்துள்ள நிலையில்  நேற்றைய தினம் மர்மமான முறையில்  உயிரிழந்துள்ளார்.

இது,  கொலையா  அல்லது தற்கொலையா என்ற  கோணத்தில்  பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவத்தில்  நெல்லியடி வதிரி இரும்புமதவடி பகுதியைச் சேர்ந்த  யோகேஸ்வரன் சிந்துஜன் வயது 28 என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

2.

பொறுப்புகளில் இருந்து விலகினார் மா. வை.!!

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவி உள்ளிட்ட சகல பொறுப்புகளிலும் இருந்து விலகுவதாக மா. வை. சேனாதிராசா அறிவித்துள்ளார். 

3.

நெல்லியடியில் ஆடையகத்திற்குத் தீ வைத்தவர் கைது!! 

நெல்லியடி நகர்ப்பகுதியில் அமைந்துள்ள ஆடையகத்திற்குத் தீ வைத்தவர் நேற்றைய தினம் காங்கேசன்துறை குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

4.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவி!! 

இலங்கை சுற்றுலா, வலுசக்தி மற்றும் சிறு தொழில் துறைகளின் அபிவிருத்திக்கு நிதி உதவி வழங்குவதாக ஆசிய அபிவிருத்தி வங்கி உறுதியளித்துள்ளது. 

5.

மற்றொரு கட்சியில் போட்டியிடும் சசிகலா ரவிராஜ்!!

நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சசிகலா ரவிராஜ் போட்டியிடவுள்ளார். 

6.

பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்!!

சமூக ஊடகங்களில் பரவும் போலிச் செய்திகள் தொடர்பாக வங்கிக் கணக்கு விவரங்கள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை வழங்குவதைத் தவிர்க்குமாறு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

7.

மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் உரையாடிய ஆசிரியர் மீது விசாரணை!!

யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல பெண்கள் பாடசாலை ஒன்றில் மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் ஆபாசமாக உரையாடிய ஆசியர் தொடர்பில் அதிபரால் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய வலய கல்வித் திணைக்களத்தினால் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

செய்தியாளர் – சமர்க்கனி

Related Articles

Leave a Reply

Back to top button