இன்றைய (05.08.2024 – திங்கட்கிழமை ) பத்திரிகையில் முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகள் ஒரே பார்வையில் சுருக்கமாக!!
News
1.
ஜனாதிபதி ரணில் – தமிழரசு கட்சியினர் சந்திப்பு!!
திருகோணமலை மாவட்ட தமிழரசுக் கட்சியினரை ஜனாதிபதி ரணில் சந்தித்து உரையாடியுள்ளார்.
2.
பொலிஸ் அதிகாரி ஒருவரின் வெறிச்செயல்!!
இங்ஙினியாகலை பகுதியில், பொலிஸ் அதிகாரி ஒருவர், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரையும் அவரது மனைவி மற்றும் மாமியாரையும் சுட்டுக் கொன்றுவிட்டு தன்னைத்தானே சுட்டு இறந்துள்ளார்.
3.
குழந்தை பால் குடிக்காததால் கால் கைகளைத் திருகினேன்!!
நேற்றைய தினம், அளவெட்டிப் பகுதியில் குழந்தை ஒன்று மர்மமான முறையில் இறந்ததைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் ” குழந்தை, பால் குடிக்க மறுத்ததால் கால் கைகளைத் திருகியதாகவும் தான் கொலை- செய்யவில்லை எனவும் பச்சிளங்குழந்தையின் தாயார் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
3.
தேர்தல் தொடர்பான முக்கிய அறிவிப்பு!!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது, அரச அதிகாரிகளால், தேர்தல் சட்டம் மீறப்படும் சந்தர்ப்பங்களில் 076-7914696 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது 011-2505566 என்ற தொலைநகல் இலக்கத்திற்கோ முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்க முடியும் எனவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
4.
மத்தி எடுத்த அதிகாரங்கள் மாகாணத்திற்கு!!
மத்தி எடுத்த அதிகாரங்களை மாகாணத்திற்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இது தொடர்பில் சேனாதிராஜா மற்றும் சுமந்திரனுடன் பேசியுள்ளோம் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
5.
பெற்றோல் விலை 5 000 ஆகும்!!
நாடு மீண்டும் தோல்வியடைந்தால் ஒரு லீற்றர் பெட்ரோலின் விலை 5000 ரூபாவாகவும், ஒரு மூட்டை உரம் 50,000 ரூபாவாகவும் அதிகரிக்கும் என முன்னாள் அமைச்சர் பீ ஹரிசன் குறிப்பிட்டுள்ளார்.
செய்தியாளர் – சமர்க்கனி