இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இன்றைய (04.09.2024 – புதன்கிழமை) பத்திரிகையில் முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகள் சுருக்கமாக ஒரே பார்வையில்!!

News

 1.

மருத்துவர்கள் அடையாள வேலை நிறுத்தம்!!

நேற்றைய தினம் நாடு முழுவதும் உள்ள அரச மருத்துவர்கள் ஒரு மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

2.

தனியார் ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் உயர்வு!! 

தனியார் துறையினரின் அடிப்படைச் சம்பளத்தை 17 500 ரூபாயாக உயர்த்தும் சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

3.

தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பின் தேர்தல் அறிக்கை வெளியானது!! 

தமிழ் மக்களின் இறைமையும் சுயநிர்ணய உரிமையும் புதிய அரசமைப்பு மூலம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று தமிழ் பொது வேட்பாளரின் சார்பில் தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பு வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

4.

ஆரம்பமானது தபால் மூல வாக்களிப்பு!!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று புதன்கிழமை ஆரம்பமாகி எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை நடைபெறவுள்ளது. 

5.

அனுர  வெற்றி பெற்றால் பிராந்திய அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் – சி. வி!! 

அனுரகுமார வெற்றி பெற்றால் இலங்கைத் தீவின் பிராந்திய அமைதிக்கு பங்கம் ஏற்படும் எனவும் இவரால் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியாது எனவும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி. வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

6.

தேர்தல் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு!!

அரச மற்றும் அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான சுற்றுலா இல்லங்கள்,  விடுதிகள் மற்றும் ஓய்வு இல்லங்கள் என்பவற்றை தேர்தல் காலத்தில் அரசியல்வாதிகள் மற்றும் எவருக்கும் வழங்குவதை தவிர்க்குமாறும் வாகன உரிமையாளர்கள் வாகனங்களை தேர்தல் பிரசாரங்களுக்கு வழங்குவதை தவிர்க்குமாறும் தேர்தல் ஆணைக்குழு சிறப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

7.

கடவுச்சீட்டு நெருக்கடிக்கு  விரைவில் தீர்வு!! 

நாட்டில் கடவுச்சீட்டு பெறும் நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள நெரிசலை விரைவில் முடிவுக்கு கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

8.

கையூட்டுப் பெற்ற அரச உத்தியோகத்தர்கள் கைது!! 

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் பணியாற்றும் இரண்டு உத்தியோகத்தர்கள் இலஞ்ச ஊழல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செய்தியாளர் – சமர்க்கனி

Related Articles

Leave a Reply

Back to top button