இன்றைய (03.09.2024 – செவ்வாய்க் கிழமை) பத்திரிகையில் முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகள் சுருக்கமாக ஒரே பார்வையில்!!
News
1.
நூடுல்ஸ் சாப்பிட்டு உறங்கிய சிறுமி மரணம்!!
தமிழகத்தில் உள்ள பகுதியொன்றில் இரவு நூடுல்ஸ் சாப்பிட்டு உறங்கிய 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
2.
புலமைப்பரிசில் பரீட்சை அட்டவணை வெளியானது!!
2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அட்டவணையை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, செப்டம்பர் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் 10.45 மணி வரை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் இரண்டாவது வினாத்தாள் நடைபெறும் என திணைகளம் தெரிவித்துள்ளது.
அன்று காலை 11.15 மணி முதல் மதியம் 12.15 மணி வரை முதலாவது வினாத்தாள் நடைபெறும். தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இம்முறை 2,649 பரீட்சை நிலையங்களில் நடைபெறும்.
3.
தேர்தல் சட்டத்தை மீறினால் பதவி பறிப்பு!!
அரச ஊழியர்கள் தேர்தல் சட்டத்தை மீறிச் செயற்பட்டால் அவருகளின் பதவி பறிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
4.
தமிழ் பொதுவேட்பாளரின் தேர்தல் அறிக்கை இன்று!!
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் அறிக்கை இன்று மு. ப 11 மணியளவில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு தீர்வு தருவேன் – சஜித்!!
நானும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவன் என்ற வகையில் காணாமல் ஆக்கப்பட்டவர் உறவுகளுக்கு தீர்வினைப் பெற்றுத் தருவேன் என கிளிநொச்சியில் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.
6.
மருத்துவர்கள் வேலை நிறுத்தம்!!
இன்று – செவ்வாய்க்கிழமை 12 மணி முதல் 1 மணி வரை வடமாகாண அரச வைத்தியசாலைகளில் அடையாள வேலை நிறுத்தம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்தியாளர் – சமர்க்கனி