இன்றைய ( 01.10. 2024 – செவ்வாய்க் கிழமை) பத்திரிகையில் முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகள் சுருக்கமாக ஒரே பார்வையில்!!
1.
பெற்றோலிய பொருட்கள் விலை குறைப்பு!!
நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.
2.
வெளிவிவகார அமைச்சின் முக்கிய அறிவிப்பு!!
லெபனான் மற்றும் சிரியாவில் தற்போது நிலவும் கொந்தளிப்பான சூழ்நிலை காரணமாக, இலங்கைப் பிரஜைகள், மறு அறிவித்தல் வரும் வரை அந்த நாடுகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
3.
முன்னிலையில் வேம்படி மகளிர் பாடசாலை!!
க. பொ. த சாதாரண தரப் பரீட்சையில் யாழ். வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் 114 மாணவிகள் 9 ஏ சித்தியைப் பெற்றுள்ளனர்.
4.
2025 மார்ச்சில் சாதாரண தரப் பரீட்சை!!
2024ம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சைகள் 2025 மார்ச்சில் நடத்தப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
5.
இலங்கையுடன் இணைந்து பயணிக்கும் இந்தியா!!
ஜனாதிபதி அனுரகுமாரவுடன் இணைந்து இலங்கையின் அபிவிருத்திக்கு இந்தியா தொடர்ந்து பங்களிப்பு வழங்கும் என இந்தியத் தூதுவர் சந்தோஷ் யா தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் – சமர்க்கனி