இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இன்றைய பத்திரிகை (24.07.2024) முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகள்!!

News

 1.

பாராளுமன்றில் கறுப்பு  யூலைக்காக மன்னிப்பு கோரல்!!

41 வருடங்களுக்கு முன்பு நடந்த கறுப்பு யூலைச் சம்பவத்திற்காக நாட்டின் பிரஜை என்கிற ரீதியில் தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோருவதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

2.

முப்படைகளும் களத்தில்!!

நாட்டில் அமைதியைப் பேணும் பொருட்டு முப்படைகளும் தயார் நிலையில் இருக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேரிவித்துள்ளார். 

3.

ஜனாதிபதி தேர்தல் குறித்து வாக்குவாதம்!!

இலங்கை ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் நேற்றையதினம் பாராளுமன்றத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

4.

தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் அமைதி காக்கவேண்டும் – இ. தே. க!! 

வடக்கு கிழக்கு இணைந்து தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நியமிக்கவுள்ள நிலையில் மலையக தமிழ் கட்சிகள் இவ் விடயத்தில் மூக்கை நுழைக்க கூடாது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. 

5.

கறுப்பு யூலை தினம் அனுஷ்டிப்பு!!

தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட கறுப்பு யூலை இனப்படுகொலை நாளின் 41வது வருட நினைவேந்தல் வடக்கு கிழக்கில் நினைவுகூரப்பட்டது. 

6.

வைத்தியர் அர்ச்சுனா பதவி மாற்றம்!!

யாழ்.. சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பொறுப்பதிகாரி வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா,  ஊழல்களை வெளிக்கொணர்ந்த நிலையில்,   பேராதனை வைத்தியசாலையின் மருத்துவ அதிகாரியாகத் தரமிறக்கப்பட்டுள்ளார்.

7.

சம்பள முரண்பாடு தொடர்பில் ஆராய்வு!!

அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகளைக் கையாள்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழு, சம்பள கொடுப்பனவுகளை திருத்துவதற்கான முன்மொழிவுகளை கோர ஆரம்பித்துள்ளது.

செய்தியாளர் – சமர்க்கனி

Related Articles

Leave a Reply

Back to top button