இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இன்றைய பத்திரிகையில் (28.07.2024 – ஞாயிற்றுக்கிழமை) முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகளின் சுருக்கம்!!

News

 1.

இலங்கையில் மலிந்த கொலைகள்!!

இலங்கையில் 2023 ஜனவரி முதல் ஒக்டோபர் வரையிலான பத்து மாதங்களில் 488 கொலைகள் பதிவாகியுள்ளன. தேசிய கணக்கு தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

2.

தேர்தலுக்காக விசேட பொலிஸ் குழு!!

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைளுக்காக விசேட பொலிஸ் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

3.

யாழ்ப்பாணத்தில் மோசடி அதிகரிப்பு!! 

யாழில் தற்போது வங்கி மற்றும் வணிக மோசடிகள் அதிகரித்துள்ளதாகவும் மக்கள் அவதானமாக இருக்குமாறும் யாழ்.  வர்த்தகர் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

4.

ரணிலே எமது தெரிவு!! 

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகத் தெரிவாவதே தனது விருப்பம் எனவும்  அதுவே தற்போதைய சூழலுக்கும்  தமிழ் மக்களுக்கும் நல்லது எனவும் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

5.

புலிகள் மீதான தடை மேலும் 6 மாதங்கள் நீடிப்பு!!

ஐரோப்பிய ஒன்றியம்  தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை மேலும் 6 மாதங்களுக்கு நீடித்துள்ளதாக அறிக்கை ஒன்றின் மூலம் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

செய்தியாளர் – சமர்க்கனி  

Related Articles

Leave a Reply

Back to top button