இன்றைய பத்திரிகையில் (26.07 2024 – வெள்ளிக் கிழமை) முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகள்!!
News
1.
விக்ரமபாகு கருணாரட்ண காலமானார்!!
தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த சிங்கள தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன அவர்கள் தனது 81வது வயதில் நேற்று காலமானார்.
2.
யாழில் வெடிமருந்துடன் இளைஞன் கைது!!
யாழ்ப்பாணம் – நகர்ப்பகுதிக்கு வெடிமருந்துடன் வந்த அரியாலை – காளிகோயில் வீதியைச் சேர்ந்த 32வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று நடைபெற்றுள்ளது.
3.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு!!
தேர்தல் திகதி உள்ளிட்ட விபரங்களை உள்ளடக்கிய அதிவிசேட வர்த்தமானி இன்று தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்படவுள்ளநு.
4.
ஊடக, சமூக செயற்பாட்டாளரான இளைஞன் மாரடைப்பால் மரணம்!!
இசைப்பிரியன் என்று அறியப்பட்ட ஊடகவியலாளரும் சமூக செயற்பாட்டாளருமான முன்னாள் போராளி, அச்சுதநாயர் சேகுவேரா மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
5.
ரணில் பெரமுனவை உடைத்து விட்டார்!!
புலிகளைப் இரண்டாகப் பிரித்தது போல ரணில், பொதுஜன பெரமுனவையும் பிளவுபடுத்தி விட்டார் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
6.
வெலிக்கடை படுகொலை தினம் அனுஷ்டிப்பு!!
பல்வேறு காலகட்டங்களில் சிறைகளிலும் தடுப்பு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டிருந்து படுகொலை செய்யப்பட்ட அரசியல் கைதிகளுக்கான நினைவேந்தல் நேற்று – யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் இடம்பெற்றது.
செய்தியாளர் – சமர்க்கனி