இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இன்றைய பத்திரிகையில் (04.08.2024 – ஞாயிற்றுக் கிழமை) முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகள் ஒரே பார்வையில் சுருக்கமாக!!

News

1.

வைத்தியர் அர்ச்சுனா மற்றும் யூரியூப்பர்கள் இருவர் கைது!!

வைத்தியர் அர்ச்சுனாவுடன் வைத்தியசாலைக்குள் நுழைந்த இரண்டு யூடியூப் சமூக வலைத்தள பதிவாளர்கள் உள்ளடங்களாக அத்துமீறி நுழைந்த அனைவரையும் கைது செய்ய மன்னார் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

2.

24 இலங்கையர்கள் குவைத்தில் கைது!!

குவைத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட 24 இலங்கையர்களை குவைத் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

3.

இலங்கை வந்த இந்திய நீர்மூழ்கி கப்பல்¡

இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Shalki’ நீர்மூழ்கி கப்பல் உத்தியோகபூர்வ விஜயமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. குறித்த நீர்மூழ்கி கப்பல் நாட்டின் பல கடற்பகுதிகளுக்கு பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

4.
தேர்தலின் பின்னரே 3வது மீளாய்வு – சர்வதேச நாணய நிதியம்!!

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் அரசாங்கத்துடன் விரிவான நிதி வசதித் திட்டம் தொடர்பான மூன்றாவது மீளாய்வின் காலம் குறித்து கலந்துரையாடவுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட தூதுவர் பீட்டர் ப்ரூவர் தெரிவித்துள்ளார்.

5.
முந்திச்செல்ல முயன்ற வாகனத்தால் விபத்து!!

யாழ்ப்பாணம் – சுன்னாகத்தில் , ஹையேஸ் வாகனம் ஒன்று, வீதியில் சென்ற மோட்டார் சைக்கிளின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

6.
ரணிலை நம்ப முடியாது – விக்னேஸ்வரன்!!

எமது நம்பிக்கைக்கு ரணில் துரோகமிழைத்துள்ளார். அதனால் இனியும் அவரை நம்ப முடியாது என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி. வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

7.
தேர்தல் சட்டமீறல் தொடர்பில் 45 முறைப்பாடுகள்!!
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் தொடர்பில் 45 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

8.
இலங்கைக்கு வந்த அரிய வகை புலம்பெயர் பறவை!!

ஹிக்கடுவ கடற்கரையில் சுகயீனம் அடைந்த நிலையில் காணப்பட்ட அரிய வகை புலம்பெயர்ந்த பறவையொன்று வனவிலங்கு அதிகாரிகள் குழுவினால் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அத்திடிய பறவைகள் சரணாலயத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

செய்தியாளர் – சமர்க்கனி

Related Articles

Leave a Reply

Back to top button