இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இன்றைய செய்திகள் சுருக்கமாக ஒரே பார்வையில்!!

News

 1.

பெருகும் பொது வேட்பாளருக்கான ஆதரவு!! 

தமிழ் பொது வேட்பாளருக்கு வடக்கு கிழக்கில் மட்டுமல்லாது தெற்கில் இருந்தும் அழைப்புகள் வருவதாக தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோ தெரிவித்துள்ளது. 

2.

மாம்பழத்தின் விலை ஏழு இலட்சம்!!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் முருகன் ஆலயத்தில் பூஜைக்கு வைக்கப்பட்ட மாம்பழம் 7 இலட்சம் ரூபாய்க்கு ஏலம்போயுள்ளது.

3.

முன்னணி – பொலிசார் முரண்பாடு!!

அம்பாறை – திருக்கோவில் பகுதியில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய துண்டுபிரசுர விநியோகம் காவல்துறையினரினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

4.

சாதனை படைத்த யாழ்ப்பாண கல்லூரி மாணவி!! 

வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வன்மை போட்டியில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரி மாணவி மகிந்தன் மாதுரி ஓட்டப்போட்டியில் புதிய சாதனை படைத்துள்ளார். 

5.

உள்ளூராட்சி சபைத்தேர்தல் குறித்து சிறப்பு கலந்துரையாடல்!!

உள்ளூராட்சி சபை தேர்தல் குறித்து சிறப்பு கலந்துரையாடல் ஒன்றை அடுத்த வாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

செய்தியாளர் – சமர்க்கனி 

Related Articles

Leave a Reply

Back to top button