பிணமொன்று பேசுகிறது….
இன்று ஒரு துக்கம் நடந்ததால் நான் பிணவறைக்குள் நுழைந்த நாள், உள்ளே நான் பார்த்தது விவரிக்க முடியாதது…. மனிதர்கள் வெறும் தரையில் நிர்வாணமாக படுத்துக் கிடந்தனர். பத்துக்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர். சில பிணங்கள் வெற்று தரையில், சில பிணங்கள் மேசைகள் மீது மற்றும் ஒன்று பிணத்தை கூறு போடும் திட்டின் மேல் வைக்கப்பட்டிருந்தன. பெண்களும் ஆண்களும் ஒன்றாக கிடத்தி வைக்கப்பட்டிருந்தனர்.
கதவை உள்ளே தள்ளிக்கொண்டு, பிணவறை உதவியாளர் உள்ளே வந்தார். ஒரு பிணத்தின் உடலில் உள்ள அனைத்து துணிகளையும் அகற்றி, நிர்வாணப் படுத்தினார். ஆடை அகற்றப்பட்டவரால் எதிர்ப்புத் தெரிவிக்க முடியவில்லை, அவர் தனது நிர்வாணத்தை மறைக்க தனது கைகளை அசைக்க முடியவில்லை, என்னை நானே கேட்டுக்கொண்டேன், இது என்ன வாழ்க்கை?
👉எல்லாவற்றையும் சொந்தமாக்கிக் கொள்ள நாம் ஏன் போராடுகிறோம்?
👉உலகமே நமக்குச் சொந்தம் என்ற திமிரும், அகங்காரமும் ஏன்?
👉நாம் ஏன் ஒருவரையொருவர் மன்னித்து, அரவணைத்து அன்பான ஒரு வாழ்க்கை வாழ முடியாது?
5 வீடு வைத்திருக்கும் வீட்டு உரிமையாளர்கள், பெரிய பட்டம் பெற்றவர்கள், சொகுசான கார் வைத்திருப்பவர்கள், அனைவரும் வெட்கமின்றி நிர்வாணமாக ஒருவர் அருகில் ஒருவர் படுத்திருப்பதைப் பார்த்தேன். இந்த ஊரின் பெரும் பணக்காரனும், கிணறு வெட்டும்போது மண் சரிந்து இறந்த தொழிலாளியும் ஒரே இடத்தில நிர்வாணமாக… விதவிதமான ஹேர் ஸ்டைலுடன், வித விதமான ஆடைகளில் தன அழகின் மீது கர்வம் கொண்ட பெண்கள் இங்கு தலைவிரி கோலமாக நிர்வாணமாக…
எதை நோக்கி ஓடுகிறோம்… யாருக்கேனும் ஒரு உதவி செய்கிறோமா?
வாழ்க்கை ஒன்றுமில்லை, பதவி என்பது சிறிது காலம், செல்வமும் வயதும் தற்காலிகமானது. நான் இந்த உலகத்தை எப்போது விட்டு செல்வேன் என்று எனக்குத் தெரியாமல் இருந்தது., ஆனால் நான் உயிருடன் இல்லாதபோது எனக்கு என்ன நடக்கும் என்று இன்று புரிந்தது.
ஒருவேளை நான் மீண்டும் உயிர்த்து எழும் வரம் கிடைத்தால்…
நான் எனக்குள் சிறப்பாக இருக்க விரும்புகிறேன், பணிவாக இருக்க விரும்புகிறேன். மிகவும் எளிதாக பிறரை மன்னிக்க விரும்புகிறேன், முன்பை விட மனிதாபிமானத்துடன் இருக்க விரும்புகிறேன், ஏனென்றால் வாழ்க்கை ஒன்றும் இல்லை, மரணம் நிச்சயம் என்பதை நான் கண்டேன், அது வாழ்க்கையில் ஒரு நிலையை நிலைநிறுத்துகிறது.
இறுதியில் ஒன்றை சொல்ல விரும்புகிறேன்.. அந்த பிணவறை உதவியாளர் சொன்னது என் காதில் விழுந்தது..
“அந்த கருப்பு கலர் சட்ட போட்டவரை மட்டும், பாத்து மெதுவா பண்ணுப்பா..நல்ல மனுஷன்”.
இங்கு இறந்த பின்பும் வாழ்வது சிலர் மட்டுமே..
எனவே என் சகோதர சகோதரிகளே.. பணிவாக இருங்கள்.. அன்பாக இருங்கள்.. மன்னித்து பழகுங்கள்..
புரிந்தால் வாழ்க்கை உங்களுடையது
பகிர்வு