
காரைநகர் கிழவன்காடு கலாமன்றம் நடாத்தும் சற்குரு ஸ்ரீதியாகராஜ சுவாமிகளின் 175வது இசை ஆராதனை விழா இன்று (22) கிழவன்காடு கலாமன்ற மனோன்மணி கலையரங்கில் நடைபெற்றது.
ஈழத்து பிரபல நாதஸ்வர, தவில் கலைஞர்களால் மங்கள இசை வழங்கப்பட்டது. பின்னர் ஈழத்து பிரபல கர்நாடக இசைக்கலைஞர்கள் வாத்திய கலைஞர்கள் வழங்கும் இசை ஆராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிறுவர்கள் மற்றும் பெரியோர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் புகழ் பூர்த்த ஈழத்து கலைஞர்கள், கலை இரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.