கல்விசெய்திகள்புலமைச்சிகரம் அமரர் வே. அன்பழகன் நினைவான கல்வி பகுதி
இன்று நடைபெறவுள்ள ஆசிரியர் அமரர் வே. அன்பழகன் ஞாபகார்த்த கருத்தரங்கின் நான்காவது அமர்வு!!
Seminar

ஐவின்ஸ் தமிழ் இணையத்தம் முன்னெடுக்கும் ஆசிரியர் அமரர் வே. அன்பழகன் ஞாபகார்த்த கருத்தரங்கின் நான்காவது அமர்வு இன்று மாலை 7.45 மணியளவில் zoom ஊடாக நடைபெறவுள்ளது.
இக் கருத்தரங்கில் யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் உயர்திரு. ஆர். சர்வேஸ்வரா அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை வழங்கவுள்ளார்.
அதிபரும் முன்னாள் புலமைச்சுடர் ஆசிரியருமான து. திலிப்குமார் வளவாளராக தமது வழிகாட்டலை முன்னெடுக்கவுள்ளார்.
மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
செய்தியாளர் – சமர்க்கனி