
சொத்து மதிப்பீட்டறிக்கையை சமர்ப்பிக்காத அரச அதிகாரிகளுக்கு இன்று(14) முதல் அபராதம் விதிக்கப்படும் என்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
நாளைய(15) தினத்திற்குப் பின்னர் விபரங்களை சமர்ப்பிக்கும் அரச அதிகாரிகளிடம் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவித்துள்ளது
.
மேலும், அபராதம் விதிப்பது தொடர்பில் இறுதி முடிவு இன்று அறிவிக்கப்படும் என்று ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, இன்று முதல் தாமதமாகும் நாட்களுக்கான அபராதம் அவர்களின் சம்பளத்தில் அறவிடப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.