அன்று
ஒரு அறை உள்ள வீட்டில் ஐந்து பத்து பேர் ஒன்றாக வாழ்ந்தோம்
இன்று
ஐந்து பத்து அறை உள்ள வீட்டில் ஒருவர் இருவர் மட்டும் வாழ்கிறோம்
அன்று
ஆயிரம் பேருக்கு உதவி செய்தவன் யாரிடமும் விளம்பரம் இல்லாமல் வாழ்ந்தார்
இன்று
ஒரு நபருக்கு உதவி செய்தவனை ஆயிரம் பேர் தெரிந்து கொள்கிறார்கள்
அன்று
வயறு நிரப்புவதற்காக பல கிலோமீட்டர் தூரம் நடந்து வேலைக்கு சென்றோம்
இன்று
வயறு குறைப்பதற்காக பல கிலோ மீட்டர் தூரம் நடைப்பயிற்சி செய்கிறோம்
அன்று
வாழ்வதற்காக சாப்பிட்டோம்
இன்று
சாப்பிடுவதற்காக வாழ்கிறோம்
அன்று வீட்டிற்குள் உணவருந்திவிட்டு கழிவறையை வெளியே பயன்படுத்தினோம்
இன்று
வெளியே உணவருந்திவிட்டு கழிவறையை வீட்டுக்குள் பயன்படுத்துகிறோம்
அன்று
மானம் காப்பதற்காக உடை அணிந்தோம்
இன்று
மானத்தை வெளியுலகத்திற்கு காட்டுவதற்காக உடை அணிகிறோம்
அன்று
கிழிந்த ஆடைகளை தைத்து பயன்படுத்தினோம்
இன்று
தைத்த ஆடைகளை கிழித்து பயன்படுத்துகிறோம்
அன்று
இருப்பதை வைத்து பண்டிகை காலத்தை கொண்டாடினோம்
இன்று
பண்டிகைக்கு ஏற்றது போல் கொண்டாடுகிறோம்
அன்று
ஆசிரியரிடமிருந்து உதை வாங்காமல் இருக்க மாணவர்கள் ஆண்டவனை வேண்டினார்கள்
இன்று
மாணவர்களிடமிருந்து உதை வாங்காமல் இருக்க ஆசிரியர்கள் ஆண்டவனை வேண்டுகிறார்கள்
நாம் கடந்து வந்த பாதை திரும்பிப் பார்ப்பதற்கு 40 வயதை கடந்த நம்மால் மட்டுமே முடியும்.
பாஸ்கர்