
யாழ். வட்டுக்கோட்டை பகுதியில் வாள்வெட்டுக் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக கடும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தை கட்டுப்படுத்த வந்த பொலிஸார் மீது ஒரு தரப்பினர் கல்லெறிந்ததன் காரணமாக அவர்களைக் கட்டுப்படுத்த பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்ததுடன் இருவரை கைது செய்துள்ளனர்.
நேற்றைய தினம் இரவு ஆரம்பித்த மோதல் இன்று வரை தொடர்ந்துள்ளதாகவும் இதனால் மக்கள் அச்சமும் பதற்றமும் அடைந்துள்ளனர் எனவும் கூறப்படுகிறது.