இலங்கைசெய்திகள்

வவுனியா நகரில் ஒரே இரவில் ஐந்து கடைகளில் துணிகரத் திருட்டு!!

வவுனியா நகரில் ஒரே இரவில் ஐந்து கடைகளில் துணிகரத் திருட்டு. வவுனியா மில்வீதி, சூசைப்பிள்ளையார்குளம்வீதி, கந்தசாமிகோவில் வீதி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள விற்பனை நிலையங்களிற்கு சென்ற திருடர்கள் அவற்றின் கூரைத்தகடு மற்றும் வாயிலை உடைத்து உள்நுழைந்துள்ளதுடன் அங்கு வைக்கப்பட்டிருந்த பணத்தை திருடிச்சென்றுள்ளனர்.

நேற்றையதினம் இரவு குறித்த கடைகளை அதன் உரிமையாளர்கள் மூடிச்சென்றிருந்த நிலையில் இன்று காலை மீண்டும் திறப்பதற்காக வருகைதந்தபோது கடைகள் உடைக்கப்பட்டிருப்பதை அவதானித்தனர். சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இன்று (07) அதிகாலை வேளையில் குறித்த திருட்டு சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் சந்தேகிக்கப்படுவதுடன் குறித்த கடைகளில் இருந்து பலஇலட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பாக சீ.சீ.டீ.வி கமராக்களின் உதவியுடன் வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர் கிஷோரன்

Related Articles

Leave a Reply

Back to top button