இலங்கைசெய்திகள்

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் புதிய உப தவிசாளராக சி.சுப்பிரமணியம் தெரிவு!!

vavuniya

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் புதிய உப தவிசாளராக சி.சுப்பிரமணியம் தெரிவு. வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் புதிய உப தவிசாளராக தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சி.சுப்பிரமணியம் அமோக உறுப்பினர்களின் ஆதரவுடன் சபையினால் இன்று தெரிவு செய்யப்பட்டுள்ளார் . 


வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் உப தவிசாளரான மகேந்திரன் கடந்த மாதம் சுகயீனம் காரணமாக உயிரிழந்ததையடுத்து வெற்றிடமாகக் காணப்பட்ட உப தவிசாளருக்கான தெரிவு இன்று (24) காலை சபையில் போட்டிக்கு விடப்பட்டது இதன்போது ஈரோஸ் கட்சியைப் பிரதிநிதிப்படுத்தி சசிதரனும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பாக சி.சுப்பிரமணியமும் போட்டியிட்டனர் .


இதன்போது சி.சுப்பிரமணியத்திற்கு ஆதரவாக 16 வாக்குக்கள் கிடைக்கப்பெற்றது.இவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஈரோஸ் அமைப்புக்கு மூன்று வாக்குக்கள் கிடைத்தது . இன்று சபையின் 24 உறுப்பினர்கள் பிரசன்னமாகியிருந்தனர். அதில் 16 பேர் ஆதரவாக வாக்களித்தனர் . ஐந்து பேர் நடுநிலையை வகித்தனர் . ஐந்துபேர் சபைக்கு சமூகமளிக்கவில்லை . என்பது குறிப்பிடத்தக்கது .

செய்தியாளர். கிஷோரன்

Related Articles

Leave a Reply

Back to top button