இலங்கைசெய்திகள்

லண்டனில் பெக்ஸ்லீஹீத் பகுதியில் தீப்பரவல் – இலங்கைத்தமிழர் நால்வர் பலி!!

london

லண்டனின் தென் கிழக்குப் பகுதியில் உள்ள பெக்ஸ்லீஹீத் எனும் இடத்தில் ஏற்பட்ட பாரிய தீப்பரவல் காரணமாக இலங்கையைப் பூர்வீகமாக கொண்ட நால்வர் பலியாகியுள்ளனர். 

இந்த அனர்த்தத்தில் இரண்டு பெண்களும் இரண்டு சிறுவர்களும் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திருகோணமலை சேர்த்த ஓரே குடும்பத்தவர்களான நால்வர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .

குறித்த கட்டடத்தொகுதியில் தீப்பரவல் ஏற்பட்டதாக உறவினர் ஒருவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.  6 தீயணைப்பு இயந்திரங்கள 40 தீயணைப்பு வீரர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் நால்வரது சடலங்களுமே மீட்கப்பட்டுள்ளது.  ஏற்கனவே அவர்கள் இறந்திருந்தமை தெரியவந்துள்ளது. 

ஆயினும் இக் கட்டடத்தில் இருந்து வெளியேறிய ஒருவர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button