இலங்கைசெய்திகள்

மாவீரர் வாரம் ஆரம்பித்துள்ள நிலையில் பொலிசார் கெடுபிடி!!

police

மாவீரர் வாரம் ஆரம்பித்துள்ள நிலையில் பொலிசார் கெடுபிடி. தமிழ் மக்களின் விடுதலைக்காக வித்தாகிய வீரமறவர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம்  நேற்றையதினம் ஆரம்பித்துள்ள நிலையில் வவுனியாவின் குறிப்பிட்ட சில பகுதிகளில் பொலிசார் விசேட பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.


குறிப்பாக கடந்த வருடங்களில் மாவீரர் தினம் அனுஸ்டிக்கப்பட்ட வவுனியா நகரசபை வாயிலில் அமைந்துள்ள பொங்குதமிழ் தூபி மற்றும் வவுனியா குளத்தடி மற்றும் நகரின் முக்கிய சந்திகளில் பொலிசார் விசேட கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொலிசாரின் விண்ணப்பத்திற்கமைய மாவீரர் தினத்தினை அனுஸ்டிப்பதற்கு வவுனியா நீதிமன்றம் 8 பேருக்கு தடை உத்தரவு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button