இலங்கைசமீபத்திய செய்திகள்செய்திகள்
மாப்பாண முதலியாரின் நினைவாக யாழ் மாநகர சபைக்கு செங்கோல் கையளிப்பு.
jaffna

நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் 10ஆவது நிர்வாக அதிகாரி குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியாரின் நினைவாக யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு செங்கோல் (19) கையளிக்கப்பட்டது.

அண்மையில் குகபாதமடைந்த நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் 10ஆவது நிர்வாக அதிகாரி குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியாரின் நினைவாக நல்லூர் ஆலயம் மற்றும் யாழ்ப்பாணத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் முகமாக பிரதிஷ்டை செய்யப்பட்ட செங்கோல் கையளிக்கப்பட்டது.
நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் 11ஆவது நிர்வாக அதிகாரி குமரேஷ் சயந்தன குமாரதாஸ் மாப்பாண முதலியாரால் யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணனிடம் நல்லூர் ஆலய வளாகத்தினுள் வைத்து பிற்பகல் 5.30 மணியளவில் சம்பிரதாயபூர்வமாக கையளிக்கப்பட்டது.
88கெங்காதரன் மயூரன், நயினை சுதர்ஷன் and 86 others4 Comments8 SharesLikeCommentShare