அமெரிக்க விஞ்ஞானிகளான விக்டர் அம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகியோருக்கு
2024ம் ஆண்டுக்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
மரபணு ஒழுங்கு முறையில் முக்கிய பங்காற்றும் சிறிய RNA மூலக்கூறுகளின் புதிய வகுப்பைக் கண்டுபிடித்தமைக்காகவே குறித்த பரிசு வழங்கப்படுகிறது.
1901 முதல் உடலியல் அல்லது மருத்துவத்தில் வழங்கப்படும் 115 ஆவது நோபல் பரிசு இது ஆகும்.
2024 ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு செவ்வாய்க்கிழமையும், அதைத் தொடர்ந்து வேதியியலுக்கான பரிசு புதன்கிழமையும் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
செய்தியாளர் – சமர்க்கனி