இலங்கைசெய்திகள்

மகிழ்ச்சியில் தனியார் துறை ஊழியர்கள்!!

private labours

தனியார் துறை ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.

வேலையாளர்களின் குறைந்தபட்ச ஓய்வுபெறும் வயது மற்றும் வேலையாட்களின் வேலையை முடிவுறுத்தல் (சிறப்பேற்பாடுகள்) (திருத்தம்) ஆகிய இரு சட்டமூலங்களையும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன இன்று சான்றுரைப்படுத்தினார்.

குறித்த இரு சட்டமூலங்களும் கடந்த 11 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன. அதன்படி தனியார் துறை ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 60 வயது வரை அதிகரிப்பது இந்தச் சட்டமூலங்களின் நோக்கமாகும்.

இதேவேளை இதுவரை தனியார் துறையில் பணியாற்றும் பல்வேறு ஊழியர்களின் ஓய்வுபெறும் குறைந்தபட்ச வயது நிர்ணயிக்கப்பட்டிருக்கவில்லை.

எனினும் பெரும்பாலும் தனியார்துறை ஊழியர்கள் ஓய்வுபெறுவது ஊழியர்களுக்கும் தொழில்வழங்குனருக்கும் இடையிலான ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை அடிப்படையாக கொண்டே ஆகும்.

இதற்கமைய, 2021 ஆம் ஆண்டு 28 ஆம் இலக்க “வேலையாளர்களின் குறைந்தபட்ச ஓய்வுபெறும் வயது” மற்றும் 2021ஆம் ஆண்டு 29ஆம் இலக்க “வேலையாட்களின் வேலையை முடிவுறுத்தல் (சிறப்பேற்பாடுகள்) (திருத்தம்)” ஆகிய இரு சட்டங்களும் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button