செய்திகள்

பேருந்துப்பயணம்- கவிதை!!

poem

Bored young man, staring out the train window on a rainy, grey and dull day

என் சன்னலோரஇருக்கையில்
சாலையோர மரங்களை
எண்ணிக் கொண்டே
பயணப்படலானேன்
சிறுபிள்ளையாய்.
நிறுத்தங்கள் வரும் சமயம்
சற்றே ஓய்வு கிடைத்தது
எனக்கும் எண்ணிக்கைக்கும்.
பேருந்தின் மிதவேகம் கூடியதும்
தவறவில்லை எண்ணிக்கை.
எண்பது நூறென
சாலையைப் பிளந்து
பயணப்படுகிறது பேருந்து.
நான் எண்ணுவதற்கு
மரங்களற்றிருக்க கண்களை
மூடிக் கொள்கிறேன்.
அன்னிய தேசத்தின் சாலையில்
விரைந்து கொண்டிருந்தது
நான் பயணப்படும் பேருந்து.

Related Articles

Leave a Reply

Back to top button