இலங்கைசெய்திகள்

புத்தாக்க அரங்க இயக்கத்திற்கு தேசிய விருது!!

avord

அமரர் சிவஜோதி அவர்களின் பொன்விழா நினைவாக தேசியரீதியாக தமிழ்நாடக நிறுவனங்களுக்கிடையில் சிறந்த நாடக அரங்கவியல் செயற்பாட்டுகளை மேற்கொள்கின்ற தமிழ் நாடக அமைப்புக்கான விருது புத்தாக்க அரங்க இயக்கத்திற்கு வழங்கப்பட்டது.

18.11.2021, வியாழக்கிழமை அன்று கிளிநொச்சி திருநகர் கனகராசா வீதியில் அமைந்துள்ள லிற்றில் எயிட் நிறுவனத்தில் நடைபெற்ற அமரர் சிவஜோதி அவர்களின் பொன்விழா நினைவு விருது வழங்கல் நிகழ்வில் இவ்விருது வழங்கிவைக்கப்பட்டது.

புத்தாக்க அரங்கஇயக்கத்தின் ஸ்தாபகர்களான எஸ்.ரி.குமரன் மற்றும் எஸ்.ரி.அருள்குமரன் இருவரும் இவ்விருதினைப் பெற்றுக்கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Back to top button