இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

டெல்ரா வைரஸ் புதிய திரிபினால் வடமாகாணத்திற்கு ஆபத்து!!

covid19

கொழும்பில் கொரோனா வைரஸ் பரவல் குறைவடைகின்றதா? இலங்கையில் புதிய கொரோனாவைரஸ் திரிபு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த வைரஸ் உப திரிபிற்கு பி 1 2172104 எனப்பெயரிடப்பட்டுள்ளது.
இது ஏ.வை 104 எனறும் அழைக்கப்படுகிறது.ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்திம ஜீவந்தன இந்த தகவலை வெளியிட்டுள்ளார். முன்னதாக பி 1217228 என்ற வைரஸ்திரிபு அடையாளம் காணப்பட்டிருந்தது. இந்த லைரஸ் உபதிரிபிற்கு ஏ . வை 28 எனப்பெயரிடப்பட்டிருந்தது. இந்த உபதிரிபுடன் 478 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஏ.வை 104 என்ற உபதிரிபுடன் 268 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த புதிய உபதிரிபு வைரஸ் வடமாகாணம் மத்தியமாகாணம் போன்றவற்றில் அடையாளம் காணப்பட்டிருக்கின்றது.
குறிப்பாக இதனால் வடமாகாணத்திற்கு அதிக ஆபத்து என கூறப்படுகின்றது. வடமாகாணத்தில் கொரோனா தொற்றாளர் அதிகரிப்பதனால் ஆபத்து நிலை அதிகம் என சுகாதார தரப்பினர் கூறுகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button