தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான சுமந்திரன் குழுவினருடன் கனடாவுக்கு விஜயம் செய்திருந்தார்.
இவர்களின் ஏற்பாட்டில் மக்களுடனான ஒன்றுகூடல் ஒன்று கனடாவில் ஏற்பாடு செய்யப்பட்டு 45 நிமிடம் தாமதமாகவும் குறைந்தளவிலான மக்களோடும் கூட்டம் ஆரம்பமானது.
இதற்கிடையில், கூட்டத்தில் இருந்தவர்கள் தங்கள் கேள்விகளை வாய்வழியாக கேட்க முயன்றபோது எழுத்துமூலமாக எழுதுமாறு கூறியதால் சிறிது பதற்றம் ஏற்பட்டது. நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள பார்வையாளர்கள் எழுத்துமூலம் கேள்விகளைக் கேட்க முடியாது எனத் தெரிவித்த பின்னர் ஏற்பாட்டாளர்கள் வாய்மொழி கேள்விகளுக்கு அனுமதியளித்தனர்.
இக்கூட்டமானது மட்டுப்படுத்தப்பட்ட பொதுமக்களின் பங்களிப்புடனேயே நடைபெற்றது.
மண்டபத்திற்குள் பிரவேசித்த மக்கள் பலர் சுமந்திரனை துரோகி என்று சொல்லி, வெளியே போ என்று கூறினார்கள்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் சாணக்கியன் மற்றும் சுமந்திரனை மண்டபத்திலிருந்து வெளியேற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னரே கனேடியப் பொலிசார் அங்கே வரவளைக்கப்பட்டுள்ளார்கள்.