இலங்கைசெய்திகள்

சுமந்திரன் உள்ளிட்ட குழுவினர் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினருடன் கலந்துரையாடல்!!

smanthiran

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான சட்ட நிபுணர்கள் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உலகளாவிய குற்றவியல் நீதிக்கான பிரிவினரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இந்தச் சந்திப்பில் உலக தமிழ்ப் பேரவையின் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தச் சந்திப்பு குறித்து ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இராஜாங்க திணைக்களத்தின் உலகளாவிய குற்றவியல் நீதிக்கான பிரிவு, இதன்போது அரசியல் பிரதிநிதித்துவம் மற்றும் நல்லிணக்கம் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்துள்ளது.

அத்துடன் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கு இலங்கையில் சிறுபான்மை குழுக்களின் முன்னோக்குகள் மற்றும் கவலைகள் குறித்து கேட்டறிவது அவசியமாகும் எனவும் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button