சினிமா

சிம்புவுக்கு வந்த சோதனை!!

simpu

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள மாநாடு பட ரிலீஸுக்கும் அவருக்கு பிரச்சனை ஏற்பட்டது. எனவே, அவரின் தாய் உஷா மற்றும் டி.ராஜேந்தர் ஆகியோர் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தின் மீது புகார் கொடுத்தனர். மாநாடு திரைப்படம் வருகிற 25ம் தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ளது. எனவே, 24ம் தேதி இரவு இப்படத்திற்கு பிரச்சனை வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் மாநாடு விழாவில் பேசிய சிம்பு ‘ரொம்ப பிரச்சனை கொடுக்குறாங்க…ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன்..பிரச்சனைகளை நான் பார்த்துக்கொள்கிறேன். என்னை ரசிகர்களாகிய நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்’ என கண்ணீர் மல்க பேசினார்.

இந்நிலையில், மால்கள், மார்க்கெட் , தியேட்டர்களில் தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என சமீபத்தில் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, இது மாநாடு பட வசூலுக்கு சிக்கலை ஏற்படுத்த வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது

Related Articles

Leave a Reply

Back to top button