இலங்கைசெய்திகள்

சபை அமர்வை இன்றும் புறக்கணித்த சஜித் அணி!

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இன்றைய சபை அமர்வையும் புறக்கணித்திருந்தது. பாராளுமன்றம் இன்று காலை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.

எனினும், ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் சபை அமர்வில் பங்கேற்கவில்லை. எதிரணி உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை, சபை அமர்வில் பங்கேற்கப்போவதில்லை என நேற்றுமுன்தினம் ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்திருந்தது.

இந்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி சபைக்கு செல்லாமல் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Related Articles

Leave a Reply

Back to top button