இலங்கைசெய்திகள்

சடலமாக மீட்கப்பட்ட பெண்!

புத்தல – குமாரகம பிரதேசத் தில் நேற்று பிற்பகல் பெண் ஒருவர் மண்வெட்டியால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில் சந்தேகநபரை பொலிஸார் தேரிவருகின்றனர்.

இந்நிலையில் உயிரிழந்த பெண்ணுக்கும் அவரது எஜமானிக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவி வந்த தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் குமாரகம, பெல்வத்த பிரதேசத்தில் வசிக்கும் 26 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கொலை செய்த சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன், அவரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை புத்தல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button