இலங்கைசெய்திகள்

குடும்பஸ்தர் தூக்கிட்டு தற்கொலை!!

Jaffna

இன்று (21) ஞாயிற்றுக்கிழமை ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் – களபூமியில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இச்சம்பவத்தில் காரைநகர் – களபூமியைச் சேர்ந்த 50 வயதுடைய சிவஞானம் ரவிச்சந்திரன் என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இன்று காலை குடும்ப உறவினர்கள் தூக்கத்தில் இருந்து விழித்துப் பார்த்தபோது, குறித்த நபர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

இதனை அடுத்து ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார், சடலத்தை கண்காணித்ததோடு, மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பின்னர் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதுவரையில், குறித்த நபரின் உயிரிழப்பிற்கான காரணத்தை கண்டுபிடிக்கவில்லை.

Related Articles

Leave a Reply

Back to top button