இலங்கைசெய்திகள்

காணாமல் போனோர் அலுவலகம் விடுத்துள்ள அறிவிப்பு!!

Missing persons

காணாமலாக்கப்பட்டவர்களை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 20 ஆவணங்களை சமர்ப்பிக்கவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்களிற்கு தமிழில் அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே, காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்த அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது.

காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகத்திற்கான விண்ணப்பம், காணாமல் போனவரின் தேசிய அடையாள அட்டை, வாகனச்சாரதி அனுமதிப்பத்திரம், பிறப்பு அத்தாட்சி பத்திரம் உட்பட 20 ஆவணங்களை காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகம் கோரியுள்ளது.

காணாமல்போனவர்கள் குறித்த முறைப்பாடு கிடைத்துள்ளதை உறுதிசெய்வதாக கடிதத்தில் தெரிவித்துள்ள காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகம், ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணங்கள் போதுமானவையல்ல என குறிப்பிட்டுள்ளது.

குறிப்பிட்ட கடிதத்தில் புள்ளியிடப்படாத ஆவணங்களை கோரியுள்ள அலுவலகம், அவற்றை மாத்திரம் அனுப்புமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button