ஆன்மீகம்

ஓம் நமசிவாய மந்திரம் – பா. காருண்யா!!

lodesiva

நமசிவாய என்பது இறைவன் சிவபெருமானுக்குரிய சிறப்பான மந்திரமாகும். நமசிவாய என்று சொன்னாலே நம் மனதில் உள்ள சங்கடங்கள் தீரும் என்பது நம்பிக்கை.

இம்மந்திரத்தினை அமைதியான காற்றோட்டமுள்ள இடம் அல்லது கோவில் போன்ற இடங்களில் அமர்ந்து மனதை வெறுமையாக்கி, முதலில் தங்கள் குலதெய்வத்தினை வணங்கி, பின் பெற்றோரையும், குருவினையும் மனதால் துதித்து மூலமந்திரத்தை மனதில் உச்சரிக்க வேண்டும்.

ஓம் நமசிவாய!

ஓம் – உலகின் மூல ஒலியான பிரணவத்தைக் காட்டுகிறது. அது படைத்தல், காத்தல், அழித்தல். அதாவது பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மூவரையும் தன்னகத்தேக் கொண்டது.

நம – ஜீவன்களை பற்றியுள்ள மாயை, ஆணவம், கர்மம் என்ற தீய அகந்தகளை காட்டுவதாகும்.

சி – சிவபெருமானைக் குறிக்கிறது.

வா – அம்பாளைக் குறிக்கிறது.

ய – மனிதர்களான ஜீவன்களை குறிக்கிறது.

  • நமசிவாய என்று உச்சரித்தால் பதினெட்டு வகை சுரமும் தீரும்.
  • நமசிவாய! லங்க நமசிவாய என்ற மந்திரத்தை உச்சரித்தால் பூமியில் மழை பொழியும்.
  • சவ்வும் நமசிவாய நம என்று உச்சரித்தால் அரச போகம் கிட்டும்.
  • ஸ்ரீயும் நமசிவாய நம என்ற மந்திரத்தை ஓதினால் கள்ளர்கள் வரமாட்டார்கள்.
  • ஊங்கிறியும் நமசிவாய நம என்ற மந்திரத்தைச் சொன்னால் மோட்சம் கிடைக்கும்.
  • ஓம் நமசிவாய என்று செபித்தால் காலனை வெல்லலாம்.
  • லூங் ஓங் நமசிவாய என்று ஓதினால் தலையில் ஏற்படும் நோய்கள் அனைத்தும் தீரும்.
  • அங் சிவாய நம என்று உச்சரித்து வந்தால் குழந்தை பாக்கியம் கிட்டும்.
  • அங் உங் வங் சிவாய நம என மந்திரம் உச்சரிக்க உடலில் உண்டான நோய்கள் தீரும்.

*ம் ம் சிவாய நம என்று உச்சரித்தால் யோக சித்தி உண்டாகும்.

இம்மந்திரத்தினை 108 அல்லது 1008 முறை விடாது சொன்னால் நற்பயன்களும் சகல வளமும் பெற முடியும்.

நமசிவாய என்னும் மந்திரத்தைத் தினமும் ஜெபிப்பவர், சிவனும், தானும் பிரிவில்லாத நிலையான மேலான பேரின்பத்தைப் பெற்று விரைவில் உன்னத முக்தி நிலை பெறுவர்கள்.

Related Articles

Leave a Reply

Back to top button