செய்திகள்புலச்செய்திகள்

ஈழத்தமிழர் ஒருவரின் இமாலய சாதனை!!

laikka

பிரான்ஸ் நாட்டில் உள்ள உதை பந்தாட்ட கழகங்களில் விரல் விட்டு எண்ணக் கூடிய மிகவும் பிரபல்யமான கழகம் பாரிஸ் உதைபந்தாட்டக் கழகம் ஆகும். அதன் தற்போதைய மதிப்புஇ பல மில்லியன் யூரோக்கள் ஆகும். குறித்த கழகத்திற்கு கடந்த அண்டுஇ பாரின் நாட்டு ராஜ குடும்பம் ஆதரவாளர்களாக இருந்து வந்துள்ளது. இருப்பினும் இந்தக் கழகத்திற்கு இதுவரை எந்த ஒரு தமிழ் நிறுவனமும் ஆதரவு கொடுக்கவில்லை. அதனை முழுமையாக வாங்கவும் இல்லை. இந் நிலையில் லைக்கா குழுமம் பாரிஸ் உதை பந்தாட்டக் கழகத்தை வாங்கியுள்ளது.

ஈழத்தமிழரான திரு சுபாஷ்கரன் அல்லி ராஜா உலகில் உள்ள பல முன்னணி உதை பந்தாட்ட கழகங்கள் ஹோட்டல்கள் மற்றும் மருத்துவ மனைகளை வாங்கி தனது குழுமத்தில் இணைத்து வருகிறார். அண்மையில் லண்டனில் கிங்ஸ் வைத்தியசாலையை 140 மில்லியன் பவுண்டுகளுக்கு கொள்வனவு செய்தார். 24 நாடுகளில் லைக்கா மொபைல் நிறுவனம் கொடி கட்டிப் பறந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.ஈழத் தமிழரான இவர் அகதியாக ஐரோப்பா வந்தவர் என்பதுடன் தனது கடின உழைப்பால் இன்று மலை போல உயர்ந்து நிற்கிறார் என்பதும் தெரியாத விடயங்கள்.

Related Articles

Leave a Reply

Back to top button