இன்றைய (26.08.2024 – திங்கட்கிழமை) பத்திரிகையில் முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகள் சுருக்கமாக ஒரே பார்வையில்!!
News
1.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த பகிரங்க சவால்!!
சஜித் பிரேமதாச மற்றும் அனு குமார திசாநாயக்க இருவரும் மக்களுக்கு பொய் சொல்வதை விட்டு விட்டு ஐ. எம். எவ் உடனான இணைய வழி கலந்துரையாடலுக்கு வரவேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பகிரங்க சவால் விடுத்துள்ளார்.
2.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் அறிவிப்பு!!
தென்னிலங்கை வேட்பாளர்கள் காத்திரமான பேச்சுக்கு அழைத்தால் அது தொடர்பில் கூடி ஆராய்ந்து முடிவுகளை எடுப்போம் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தெரிவித்துள்ளது.
3.
காணாமல் ஆக்கப்பட்டவர் உறவுகளின் பாரிய போராட்டம்!!
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான எதிர்வரும் 30ம் திகதி வெள்ளிக்கிழமை கிளிநொச்சியில் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
4.
தமிழ் பொது வேட்பாளருக்கு 50வீத வாக்குகள் கிடைக்கும்!!
தமிழ் பொது வேட்பாளர் அரியநேந்திரனுக்கு 50வீத வாக்குகள் கிடைக்கும் என ஈ. பி. ஆர். எல். எவ் இன் பொதுச் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
5.
தேர்தல் முறையை மீறும் பதிவுகள் நீக்கம்!
தேர்தல் விதிமுறைகளை மீறும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவேற்றப்படும் பதிவுகள், காணொளிகளை நீக்குவதாக சமூக ஊடகங்களின் இயக்குனர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் உறுதியளித்துள்ளனர்.
6.
புதிய கடவுச்சீட்டு பெறவுள்ளோருக்கான அறிவிப்பு!!
கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள அவசரப்படுபவர்கள் அடுத்த மாதம் வரை காத்திருக்குமாறு குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய அறிவுறுத்தியுள்ளார்.
செய்தியாளர் – சமர்க்கனி