இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
அமிலம் அருந்தியதில் குழந்தை மரணம்!!
இரண்டு வயது பதினொரு மாத வயதுடைய ஆண் குழந்தையொன்று தங்கத்தை மெருகூட்டுவதற்கு பயன்படுத்தப்படும் இரசாயன திரவத்தைக் (கொப்பர் அமிலம்) குடித்து உயிரிழந்துள்ளதாக கம்பளை கலஹா பொலிஸார் தெரிவித்தனர்.
கலஹா தெல்தோட்டையைச் சேர்ந்த பிரதீபன் ரத்னீஸ் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
தந்தையின் பகைக்கடைக்கு தாயுடன் சென்ற போது, பெற்றோர் கதைத்துக்கொண்டிருக்கையில் அமிலத்தைக் குடித்த குழந்தை, மயங்கி விழுந்த நிலையில் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சிகிச்சை வழங்கப்பட்ட போதும் குழந்தை உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது.