இலங்கை
தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து தௌபீக் எம்.பியைத் தூக்கியது மு.கா.
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் நீக்கப்பட்டுள்ளார்.
2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை ஆதரிப்பதில்லை என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானம் எடுத்திருந்தது. எனினும், கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீமைத் தவிர ஏனைய நான்கு எம்.பிக்களும் கட்சி முடிவுக்கு எதிராகச் செயற்பட்டு பாதீட்டை ஆதரித்தனர்.
இதையடுத்து அவர்களைக் கட்சியிலிருந்து இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து தௌபீக் நீக்கப்பட்டுள்ளார்.
அவர் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகச் செயற்படுகின்றார்.