இலங்கைசெய்திகள்

வானிலை அபாயம் – வீண் பயணங்களைத் தவிர்க்கவும்!!

இலங்கையில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக காடுகளுக்கு சுற்றுலாப் பயணம் செல்லுதல்இ மலையேறுதல்இ ஆற்றில் நீராடுதல்இ படகுச் சவாரி செய்தல் உள்ளிட்ட தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

குறித்த அறிவிப்பை மீறி சட்டவிரோதமான பயணங்களை மேற்கொண்டு ஏனையவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அனர்த்த நிலைமை மற்றும் கொரோனா பரவலைக் கருத்திற் கொண்டு தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button